NAM Vs OMA Highlights (Photo Credit: @ICC X)

ஜூன் 03, பார்படாஸ் (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (T20 World Cup 2024) தொடரில் இன்று நடைபெற்று முடிந்த 3-வது லீக் போட்டியில் ஓமன்-நமீபியா (NAM Vs OMA) அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர், முதலில் களமிறங்கிய ஓமன் அணி நமீபியா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. Married Woman Suicide: காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை..! காரணம் என்ன..?

இதனையடுத்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய நமீபியா அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்து, 109 ரன்கள் எடுத்து ஆட்டம் சமனில் முடிந்தது. பின்னர், சூப்பர் ஓவர் போட்டி நடைபெற்றது. சூப்பர் ஓவரில் நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், பிலால் கான் சூப்பர் ஓவரை வீசினார். இந்த சூப்பர் ஓவரில் நமீபியா அணி அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உட்பட 21 ரன்களை குவித்தது.

ஓமன் அணி வெற்றி பெற 22 ரன்கள் தேவை என்ற நிலையில், வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் நமீபியா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை நமீபியா அணியின் ஆல் ரவுண்டர் டேவிட் வீசா பெற்று சென்றார்.