PAK Vs SA, 2nd ODI (Photo Credit: @ESPNcricinfo X)

நவம்பர் 06, பைசலாபாத் (Sports News): தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டெஸ்ட் போட்டி, 3 டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. டி20ஐ தொடரை, பாகிஸ்தான் அணி 2-1 என கைப்பற்றியது. நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. IND Vs AUS, 4th T20I: ஆஸ்திரேலியா 119 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

பாகிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா (Pakistan Vs South Africa):

இந்நிலையில், பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா (PAK Vs SA) அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி, இன்று (நவம்பர் 06) பைசலாபாத்தில் உள்ள இக்பால் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷஹீன் அப்ரிடி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 269 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சல்மான் ஆகா 69 ரன்கள், முகமது நவாஸ் 59 ரன்கள், சைம் அயூப் 53 ரன்கள் அடித்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் நந்த்ரே பர்கர் 4, நகாபயோம்சி பீட்டர் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்:

ஃபகார் ஜமான், சைம் அயூப், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, ஹுசைன் தலாத், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாஹீன் அப்ரிடி (கேப்டன்), முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா.

தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:

குயின்டன் டி காக், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டோனி டி ஜோர்ஜி, மேத்யூ ப்ரீட்ஸ்கே (கேப்டன்), சினெதெம்பா கேஷிலே, டோனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ஜார்ன் ஃபார்டுயின், நந்த்ரே பர்கர், நகாபயோம்சி பீட்டர்.