Pragnanandha, M.K Stalin, Rahul Gandhi (Photo Credit: Twitter/Wikipedia/Wikipedia)

ஆகஸ்ட் 22, பாகூ (Sports News): அஜர்பைஜானில் (Ajerbaijan) நடைபெற்றுக் கொண்டிருக்கும் செஸ் உலகக் கோப்பை தொடர் (World Chess Championship) பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. கால் இறுதிப் போட்டியில் அபாரமான வெற்றியடைந்த பிரக்ஞானந்தா, அதைத்தொடர்ந்து அரை இறுதிப் போட்டியில் உலகின் மூன்றாம் சிறந்த செஸ் வீரர் ஃபேபியானோ கருணாவை (Fabiano Caruana) எதிர்த்து விளையாடினார்.

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற அரையிறுதிச்சுற்று டிராவில் முடிந்தது. இரண்டு சுற்றுகளிலும் கருணாவே முன்னிலை வகித்திருந்த போதும் பிரக்ஞானந்தா (Pragnanandha) போராடி ஆட்டத்தை டிராவில் முடித்தார். அதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று இன்று நடைபெற்றது. இதுவும் கால் இறுதிச் சுற்றைப் போலவே ராப்பிட் (Rapid) முறையில் நடைபெற்றது. பரபரப்பின்  உச்சத்தில் நடைபெற்ற டை பிரேக்கரின்  மூன்றாவது ஆட்டத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றார் பிரக்ஞானந்தா. Ulundhu Soru Preparation: பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் உளுந்தஞ்சோறு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் பிரக்ஞானந்தாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி (Rahul Gandhi) தனது ட்விட்டர் (Twitter) பக்கத்தில் “சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்கள். கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் (M.K Stalin) தனது ட்விட்டர் பக்கத்தில் பிரக்ஞானந்தாவிற்கு இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். மேலும் பிரக்ஞானந்தா தமிழகத்தின் பெருமை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) மற்றும் தமிழக பாஜக (BJP) தலைவர் அண்ணாமலையும் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.