
ஜூன் 13, லார்ட்ஸ் (Sports News): ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 (WTC Final 2025) இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் (SA Vs AUS, Day 2) மோதுகின்றன. இதில், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மூலம் நேரலையில் (WTC Final 2025 Live Streaming) பார்க்கலாம். இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். SA Vs AUS Day 2: ஆஸ்திரேலியா 218 ரன்கள் முன்னிலை.. ரபாடா, இங்கிடி அபார பந்துவீச்சு..!
தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா (South Africa Vs Australia):
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு கவாஜா 0, கிரீன் 4, மார்னஸ் லபுஷேன் 17 ரன்கள், ட்ராவிஸ் ஹெட் 11 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மித் 66 ரன்கள், வெப்ஸ்டர் 72 ரன்கள் அடித்தனர். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்கரம் 0, ரியன் ரிகில்டன் 16, வியான் முல்டர் 6, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்களில் அவுட்டாகினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 22 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 43 ரன்கள் அடித்தது.
தென்னாப்பிரிக்கா சொதப்பல்:
இந்நிலையில், 2ஆம் நாளில் கேப்டன் பவுமா 3 ரன்னிலும், டேவிட் பேடிங்கம் 8 ரன்னிலும் ஆட்டத்தை தொடங்கினார். 169 ரன்கள் பின்தங்கிய நிலையில், தென்னாப்பிரிக்க அணி நிதானமாக விளையாடியபோது, கேப்டன் பவுமா 84 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பந்தில் அவுட்டானார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, கம்மின்ஸ் வீசிய ஒரே ஓவரில் வெர்ரெயின் 13 ரன், மார்கோ யான்சன் 0 என விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 57.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் கேப்டன் கம்மின்ஸ் 6, ஸ்டார்க் 2 மற்றும் ஹேஷல்வுட் 1 விக்கெட்களை வீழ்த்தினர். ITT Vs SS: டிஎன்பிஎல் 9வது லீக் போட்டி.. திருப்பூர் - சேலம் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
ஸ்டார்க் அரைசதம்:
இதனைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணி 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. ஸ்மித் 13 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 73 ரன்னுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது, அலெக்ஸ் கேரி - மிட்செல் ஸ்டார்க் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 40 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் அடித்தது. இன்று (ஜூன் 13) 3ஆம் நாளில் ஆஸ்திரேலியா 218 ரன்கள் முன்னிலையுடன் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கத்திலேயே நாதன் லயன் 2 ரன்னில் அவுட்டாகினார். இதனையடுத்து, 10வது விக்கெட்டுக்கு மிட்செல் ஸ்டார்க் - ஹேஷல்வுட் இணை நிலைத்து நின்று விளையாடினர். 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 65 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒன்பதாவது இடத்தில் களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் அரைசதம் (136 பந்தில் 58* ரன்கள்) கடந்து அசத்தினார். இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி வெற்றிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.