Kamindu Mendis (Photo Credit: @PoppingCreaseSA X)

ஜூன் 20, காலி (Sports News): வங்கதேசம் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (SL Vs BAN Test Series 2025) விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 17 முதல் ஜூன் 21ஆம் தேதி வரையும், 2வது டெஸ்ட் போட்டி, ஜூன் 25 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரை, சோனி லிவ் தொலைக்காட்சி, பேன்கோடு இணையதளம் மற்றும் ஆப்பில் நேரலையில் (SL Vs BAN Test Live Streaming) பார்க்கலாம். ஜூன் 17ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் (SL Vs BAN 1st Test) போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். SL Vs BAN 1st Test, Day 3: பதும் நிசங்கா அபார சதம்.. இலங்கை 368 ரன்கள் குவிப்பு..!

இலங்கை எதிர் வங்கதேசம் (Sri Lanka Vs Bangladesh):

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 153.4 ஓவர்கள் விளையாடி 495 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்கள், கேப்டன் சாண்டோ 148 ரன்கள் மற்றும் லிட்டன் தாஸ் 90 ரன்கள் அடித்தனர். இதனையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 131.2 ஓவர்கள் விளையாடி 485 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 187 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 87, சண்டிமால் 54 ரன்கள் அடித்தனர்.

சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்:

இப்போட்டியில், இலங்கை அணியின் பேட்டிங் ஆல்ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் 8 பவுண்டரி, 1 சிக்சர் என 87 ரன்கள் அடித்தார். இதன்மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிவேகமாக பத்து 50 + ரன்களை அடித்த வீரர் எனும் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக, ராய் தியாஸ் 23 இன்னிங்ஸில் அடித்திருந்தார்.

  • 22 இன்னிங்ஸ் - கமிந்து மெண்டிஸ்*
  • 23 இன்னிங்ஸ் - ராய் தியாஸ்
  • 26 இன்னிங்ஸ் - துலீப் மெண்டிஸ்
  • 29 இன்னிங்ஸ் - குமார் சங்கக்கார