PSL 2024 (Photo Credit: @AliiItss X)

மார்ச் 19, கராச்சி (Cricket News): பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) இறுதிப் போட்டியில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் (Multan Sultans) அணியை எதிர்த்து, ஷதாக் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் (Islamabad United) நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இஸ்லாமாபாத் அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றது. பிஎஸ்எல் தொடரில் இது அந்த அணி வெல்லும் மூன்றாவது பட்டம். Jharkhand Road Accident: ஜார்க்கண்டில் கோர விபத்து.. சுக்குநூறான கார்.. 4 பேர் பலி..!

இந்த வெற்றிக்கு பிறகு இஸ்லாமாபாத் அணிக்கு பல கோடி ரூபாய் பரிசுத்தொகையாக கிடைத்தது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெற்றி பெற்ற அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் 3.5 கோடி வழங்கப்பட்டது. மேலும் இரண்டாம் இடத்தைப் பிடித்த முல்தான் சுல்தான் அணிக்கு இந்திய மதிப்பில் சுமார் 1.4 கோடி வழங்கப்பட்டது.