ஆகஸ்ட் 19, மும்பை (Sports News): ஆசிய கோப்பை 2025 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகார்கர் தலைமையில் மும்பையில் இன்று (ஆகஸ்ட் 19) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த தொடரில், இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க வரிசை வீரர்களாக அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மிடில் வரிசையில், திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா ஆகியோர் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்களாக அனுபவம் வாய்ந்த குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் உடன் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சில் அனுபவ வீரர் ஜஸ்பிரித் பும்ராவுடன், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். AUS Vs SA 1st ODI: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா முதலாவது ஒருநாள் போட்டி.. நாளை பலப்பரீட்சை..!
ஆசிய கோப்பை 2025:
ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) தொடர், செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி செப்டம்பர் 10ஆம் தேதி தனது முதல் போட்டியில், யுஏஇ அணியை எதிர்கொள்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி, செப்டம்பர் 14ஆம் தேதி அன்று துபாயில் நடைபெறவுள்ளது.
2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் (Asia Cup 2025 Team India Squad):
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.
🚨 A look at #TeamIndia's squad for #AsiaCup 2025 🔽 pic.twitter.com/3VppXYQ5SO
— BCCI (@BCCI) August 19, 2025