ஆகஸ்ட் 25, காபூல் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 தொடர், செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்ஹாங் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இத்தொடருக்கு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி மற்றும் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இலங்கை, ஹாங்காங், யுஏஇ மற்றும் ஓமன் அணிகள் இதுவரை அறிவிக்கவில்லை. AUS Vs SA 3rd ODI: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா 3வது ஒருநாள் போட்டி.. ஆறுதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா..?
ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு:
இந்நிலையில், ஆசிய கோப்பை 2025 தொடருக்கான 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக சீனியர் வீரர் ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இப்ராஹிம் ஸத்ரான், நீண்ட நாட்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் டி20 அணியில் இணைந்துள்ளார். மேலும், ரஹ்மனுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், நவீன் உல் ஹக், குல்பதீன் நைப், கரீம் ஜானத், ஃபசல்ஹக் ஃபரூக்கி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
2025 ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் (Asia Cup 2025 Team Afghanistan Squad):
ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், தர்வீஷ் ரசூலி, செதிகுல்லா அடல், அஸ்மதுல்லா ஒமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பதின் நைப், ஷரபுதீன் அஷ்ரஃப், முகமது இஷாக், முஜீப் உர் ரஹ்மான், அல்லா கசன்ஃபர், நூர் அஹ்மத், ஃபரித் மாலிக், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.