![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/12/Arjuna-Award-380x214.jpg)
டிசம்பர் 21, டெல்லி (Delhi): 2023ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பெறும் வீரர்களின் பட்டியலை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்மிண்டன் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ராங்கிரெட்டி சாத்விக் சாய்ராஜ் ஆகியோர் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒஜாஸ் பிரவீன் டியோதாள் (ஆர்ச்சரி), பார்ல் சவுத்ரி (தடகளம்), முகமது ஹுசாமுதீன் (பாக்சிங்), ஆர். வைசாலி (செஸ்), முகமது ஷமி (கிரிக்கெட்), அதிதி கோபிசந்த் ஸ்வாமி (ஆர்ச்சரி), ஸ்ரீசங்கர் (தடகளம்), அனுஷ் அகர்வால் (Equestrian), திவ்யகீர்த்தி சிங் (Equestraina Dressage), திக்சா தாகர் (கோல்ப்), கிருஷ்ணன் பஹதுர் பதாக் (ஹாக்கி), புக்ராம்பம் சுசிலா சானு (ஹாக்கி) உள்ளிட்டவர்களுக்கு அர்ஜுனா விருது (Arjuna Award) வழங்கப்பட உள்ளது. Innocent Jailed 48 Years: 48 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்ததும் நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நபர்: வாழ்க்கையை இழந்த நபரின் வேதனை.!
அதுமட்டுமின்றி ஆயிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), சுனில் குமார் (ரெஸ்ட்டிலிங்), நோரம் ராஷிபினா தேவி (வுஷூ), ஷித்தல் தேவி (பாரா ஆர்ச்சரி), இல்லுரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்றோர் கிரிக்கெட்), பிராசி யாதவ் (பாரா கானோயிங்), பவன் குமார் (கபடி), ரிது நேகி (கபடி), நஸ்ரின் (கோகோ), பிங்கி (லான் பவுல்ஸ்), ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் (சூட்டிங்), இஷா சிங் (சூட்டிங்), ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்) உள்ளிட்டவர்களுக்கும் அர்ஜுனா விருதுக்கு வழங்கப்பட உள்ளது.