ஜூன் 26, டெல்லி (Sports News): ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) இந்த ஆண்டு மகளிர் டி20 ஆசியக் கோப்பைக்கான (Women T20 Asia Cup 2024) அட்டவணையை வெளியிட்டுள்ளது. வருகின்ற ஜூலை 19-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 28-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரை இலங்கை நடத்துகிறது. Masked Men Attack Woman: சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கிய மர்ம நபர்கள்; வீடியோ வைரல்..!
ஆசிய கண்டத்தின் முதல் எட்டு அணிகள் நான்கு பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இலங்கை, பங்களாதேஷ், தாய்லாந்து மற்றும் மலேசியா அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். பின்னர், இறுதிப் போட்டி ஜூலை 28-ஆம் தேதி அன்று நடைபெறும்.
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்த தொடரில் தொடக்க ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நேபாளத்தை எதிர்கொள்கிறது. ஆசியக் கோப்பை தொடர், இந்த ஆண்டு அக்டோபரில் பங்களாதேஷில் நடைபெறவுள்ள 2024 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான தயாரிப்பு கட்டப் போட்டியாக செயல்படும்.
Mark your calendars! 🗓️
Women’s T20 Asia Cup 2024 begins on the 19th of July in Sri Lanka! 🏏#SportWise | #PlayWise | #AsiaCup | #WomensAsiaCup2024 | #Schedule pic.twitter.com/xuSutMAwsL
— SportWise (@SportWiseLtd) June 25, 2024