ENG Vs IND 5th Test (Photo Credit: @TUnlimitedd X)

ஜூலை 30, ஓவல் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, ஜியோ ஹாட்ஸ்டாரில் (Jio Hotstar) நேரலையில் பார்க்கலாம். அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. நடந்து முடிந்த 4 போட்டிகள் முடிவில், 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ZIM Vs NZ 1st Test, Day 1: 149 ரன்களுக்கு சுருண்டது ஜிம்பாப்வே.. நியூசிலாந்து அணி அபாரம்..!

இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):

இந்நிலையில், நாளை (ஜூலை 31) இங்கிலாந்து - இந்தியா அணிகள் (ENG Vs IND) மோதும் 5வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால், ஓல்லி போப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, இந்திய அணியில் ரிஷப் பந்த் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இப்போட்டியில். இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை சமன்செய்யும். இதனால் இவ்விரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணி:

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்கு, லியாம் டாசன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

இந்திய அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், கருண் நாயர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், என் ஜகதீசன், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப்.