ஆகஸ்ட் 07, டிரினிடாட் (Sports News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நடந்து முடிந்த டி20 தொடரில், பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஆகஸ்ட் 08) டிரினிடாட்டில் உள்ள பிரைன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. ZIM Vs NZ 2nd Test, Day 1: நியூசிலாந்து வலுவான தொடக்கம்.. வில் யங், கான்வே அரைசதம் விளாசல்..!
வெஸ்ட் இண்டீஸ் எதிர் பாகிஸ்தான் (West Indies Vs Pakistan):
இந்நிலையில், பாகிஸ்தான் அணி டி20 தொடரை வென்ற உத்வேகத்துடன் களமிறங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும். வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் (WI Vs PAK) அணிகள் இதுவரை 137 ஒருநாள் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி 71 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 63 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
ஷாய் ஹோப் (கேப்டன்), ஜூவல் ஆண்ட்ரூ, ஜெடியா பிளேட்ஸ், கீசி கார்டி ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, ஷமர் ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோதி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், நசீம் ஷா, சைம் அயூப், ஷஹீன் ஷா அப்ரிடி, சுஃப்யான் முகீம்.