அக்டோபர் 14, சென்னை (Sports News): தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Minister Udhayanidhi Stalin), 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை (CM Trophy Matches 2024) மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கடந்த 10.09.2024 சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள், அனைத்து மாவட்டங்களிலும் 10.09.2024 முதல் 24.09.2024 வரை நடைபெற்றன. Mohammed Siraj: காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்; டிஎஸ்பி முகமது சிராஜுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!
இதனையடுத்து மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நடந்து முடிந்தது. இதில் வெற்றி பெற்றுள்ள 33,000 நபர்கள் முதலமைச்சர் கோப்பை 2024 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 04-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்றைய தினம் (13.10.2024) நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை 42 தங்கம், 28 வெள்ளி, 31 வெண்கலம் உட்பட மொத்தம் 101 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. இதன் முழு விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பதக்கப் பட்டியல் - முதலமைச்சர் கோப்பை 2024 (13.10.2024):
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2024 - மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இன்று (13.10.2024) பதக்கம் பெற்றவர்களின் விபரங்கள்
(1/2)#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@Udhaystalin @mp_saminathan@SportsTN_ pic.twitter.com/oVXmLaZ3G8
— TN DIPR (@TNDIPRNEWS) October 13, 2024