ஆகஸ்ட் 08, புலவாயோ (Sports News): நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், ஜிம்பாப்வே - நியூசிலாந்து (ZIM Vs NZ) அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, நேற்று (ஆகஸ்ட் 07) புலவாயோவில் தொடங்கியது. ZIM Vs NZ 2nd Test, Day 2: ஜிம்பாப்வே பவுலர்களை வெளுத்து வாங்கும் நியூசிலாந்து.. 302 ரன்கள் முன்னிலை..!
ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (Zimbabwe Vs New Zealand):
இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 48.5 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரெண்டன் டெய்லர் (Brendan Taylor) 44 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணியின் தரப்பில் மேட் ஹென்றி (Matt Henry) 5 விக்கெட்கள் மற்றும் அறிமுக போட்டியில் களமிறங்கிய சக்கரி ஃபோல்க்ஸ் (Zakary Foulkes) 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டெவன் கான்வே இணை முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்த நிலையில், வில் யங் (Will Young) 74 ரன்களில் அவுட்டானார். முதல் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் அடித்தது. டெவன் கான்வே (Devon Conway) 79* ரன்கள், நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய ஜேக்கப் டஃபி 8* ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நியூசிலாந்து அபாரமான பேட்டிங்:
இந்நிலையில், இன்று 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜேக்கப் டஃபி 36 ரன்களில் அவுட்டாகினார். டெவன் கான்வே அபாரமாக விளையாடி சதமடித்து (153 ரன்கள்) அசத்தினார். நிலைத்து நின்று விளையாடிய ஹென்றி நிக்கோல்ஸ் 150*, ரச்சின் ரவீந்திரா 165* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 285 பந்துகளில் 256* ரன்கள் அடித்துள்ளனர். 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில், நியூசிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 601 ரன்கள் அடித்து, 476 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
ஜிம்பாப்வே (பிளேயிங் லெவன்):
பிரையன் பென்னட், பிரெண்டன் டெய்லர், நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரேக் எர்வின் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, தஃபாட்ஸ்வா சிகா, வின்சென்ட் மசேகேசா, பிளெசிங் முசரபானி, தனகா சிவாங்கா, ட்ரெவர் குவாண்டு.
நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):
வில் யங், டெவன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திர, டேரில் மிட்செல், டாம் பிளண்டெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), சக்கரி ஃபோல்க்ஸ், மேட் ஹென்றி, மேத்யூ ஃபிஷர், ஜேக்கப் டஃபி.