CSG Vs TGC Toss Update (Photo Credit: @StarSportsTamil X)

ஜூன் 23, திருநெல்வேலி (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடைபெற்று முடிந்தன. இதனையடுத்து, 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று (ஜூன் 22) நடைபெற்ற 20வது லீக் போட்டியில், மதுரை அணியை வீழ்த்தி திருப்பூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. CSG Vs TGC: சேப்பாக் - திருச்சி அணிகள் இன்று மோதல்.. சேப்பாக்கின் ஆதிக்கம் தொடருமா..?

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (Chepauk Super Gillies Vs Trichy Grand Cholas):

இந்நிலையில், இன்று (ஜூன் 23) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழஸ் (CSG Vs TGC, Match 21) அணிகள் மோதுகின்றன. பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் அணி, ஜெயராமன் சுரேஷ் குமார் தலைமையிலான திருச்சி அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சேப்பாக் அணி 6 போட்டியிலும், திருச்சி அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில், சேப்பாக் அணி 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. திருச்சி அணி 4 போட்டிகளில் விளையாடி 1 வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ஜெயராமன் சுரேஷ் குமார் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (பிளேயிங் லெவன்):

கே ஆஷிக், ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், என் ஜெகதீசன், விஜய் சங்கர், பாபா அபராஜித் (கேப்டன்), எஸ் தினேஷ் ராஜ், அபிஷேக் தன்வார், என் சுனில் கிருஷ்ணா, ஜே பிரேம் குமார், ரோஹித் சுதர், எம் சிலம்பரசன்.

திருச்சி கிராண்ட் சோழஸ் (பிளேயிங் லெவன்):

ஜெயராமன் சுரேஷ் குமார் (கேப்டன்), சஞ்சய் யாதவ், சுஜய் சிவசங்கரன், யு முகிலேஷ், ஜெகதீசன் கவுசிக், வசீம் அகமது, பி சரவண குமார், ஆர் ராஜ்குமார், எம் கணேஷ் மூர்த்தி, வி அதிசயராஜ் டேவிட்சன், கே ஈஸ்வரன்.