LKK Vs ITT 1st Batting (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 24, திருநெல்வேலி (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடைபெற்று முடிந்தன. இதனையடுத்து, 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று (ஜூன் 24) லைகா கோவை கிங்ஸ் - ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் (LKK Vs ITT, Match 22) அணிகள் மோதுகின்றன. LKK Vs ITT Toss Update: திருப்பூர் டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றி பாதைக்கு திரும்புமா கோவை..?

லைகா கோவை கிங்ஸ் எதிர் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் (Lyca Kovai Kings Vs Idream Tiruppur Tamizhans):

ஷாருக்கான் தலைமையிலான கோவை அணி, சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணியை எதிர்கொள்கிறது. நடப்பு தொடரில், கோவை அணி 5 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. திருப்பூர் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

கோவை தடுமாற்றம்:

அதன்படி, முதலில் களமிறங்கிய கோவை அணிக்கு ஜிதேந்திர குமார் 6, சுரேஷ் லோகேஷ்வர் 21, பாலசுப்ரமணியம் சச்சின் 24, குரு ராகவேந்திரன் 11, கேப்டன் ஷாருக்கான் 19 ரன்கள் என அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அடுத்து வந்த கே விஷால் வைத்யா 13 ரன்னில் நடையை கட்டினார். இறுதியில், கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் அடித்துள்ளது. திருப்பூர் அணி சார்பில் அதிகபட்சமாக எசக்கிமுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.