
ஜூன் 25, திருநெல்வேலி (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இத்தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடைபெற்று முடிந்தன. இதனையடுத்து, 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று (ஜூன் 24) நடைபெற்ற 22வது லீக் போட்டியில், கோவை அணியை வீழ்த்தி திருப்பூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. TGC Vs SMP: டிஎன்பிஎல் 23வது லீக் போட்டி.. திருச்சி - மதுரை அணிகள் இன்று மோதல்..!
திருச்சி கிராண்ட் சோழஸ் எதிர் சீசெம் மதுரை பாந்தர்ஸ் (Trichy Grand Cholas Vs Siechem Madurai Panthers):
இந்நிலையில், இன்று (ஜூன் 25) திருச்சி கிராண்ட் சோழஸ் - சீசெம் மதுரை பாந்தர்ஸ் (TGC Vs SMP, Match 23) அணிகள் மோதுகின்றன. ஜெயராமன் சுரேஷ் குமார் தலைமையிலான திருச்சி அணி, என்.எஸ்.சதுர்வேத் தலைமையிலான மதுரை அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், திருச்சி அணி 6 போட்டியிலும், மதுரை அணி 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில், திருச்சி அணி 5 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மதுரை அணி 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ஜெயராமன் சுரேஷ் குமார் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
திருச்சி கிராண்ட் சோழஸ் (பிளேயிங் லெவன்):
வசீம் அகமது, ஜெயராமன் சுரேஷ் குமார் (கேப்டன்), ஜெகதீசன் கவுசிக், ஆர் ராஜ்குமார், சஞ்சய் யாதவ், யு முகிலேஷ், பி சரவண குமார், சுஜய் சிவசங்கரன், வி அதிசயராஜ் டேவிட்சன், என் செல்வ குமரன், கே ஈஸ்வரன்
சீசெம் மதுரை பாந்தர்ஸ் (பிளேயிங் லெவன்):
ராம் அரவிந்த், பால்சந்தர் அனிருத், என்.எஸ்.சதுர்வேத் (கேப்டன்), அதீக் உர் ரஹ்மான், சி.சரத்குமார், முருகன் அஸ்வின், ஜே.அஜய் சேத்தன், பி.சரவணன், குர்ஜப்னீத் சிங், கவுதம் தாமரை கண்ணன், சங்கர் கணேஷ்