
ஜூன் 27, திண்டுக்கல் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நடப்பு தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும், 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியிலும் நடைபெற்று முடிந்தன. தற்போது, இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 4வது சுற்று லீக் ஆட்டங்கள் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சி (TNPL Live Watching) மற்றும் ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். CSG Vs SMP: டிஎன்பிஎல் 25வது லீக் போட்டி.. நாளை சேப்பாக் - மதுரை அணிகள் மோதல்..!
லைகா கோவை கிங்ஸ் எதிர் சேலம் ஸ்பார்டன்ஸ் (Lyca Kovai Kings Vs Salem Spartans):
இந்நிலையில், நாளை (ஜூன் 28) லைகா கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் (LKK Vs SS, Match 26) அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, நாளை இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. ஷாருக்கான் தலைமையிலான கோவை அணி, என் அபிஷேக் தலைமையிலான சேலம் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கோவை அணி 3 போட்டியிலும், சேலம் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில், கோவை அணி 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சேலம் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
லைகா கோவை கிங்ஸ் அணி வீரர்கள்:
ஜிதேந்திர குமார், சுரேஷ் லோகேஷ்வர், பாலசுப்ரமணியம் சச்சின், ஆந்த்ரே சித்தார்த் சி, ஷாருக் கான் (கேப்டன்), குரு ராகவேந்திரன், மாதவ பிரசாத், ஆர் திவாகர், மணிமாறன் சித்தார்த், பி புவனேஸ்வரன், ஜாதவேத் ரோஹித்யா சுப்ரமணியன், என் கபிலன், பி ஆதித்யா சுப்ரமணியன், பி ஆதித்யா, கே விஷாலிங், கே. வித்யூத், கோவிந்த் ஜி, பிரதீப் விஷால் எல், அம்ப்ரிஷ்.
சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள்:
எஸ் அபிஷேக் (கேப்டன்), ஹரி நிஷாந்த், ராஜேந்திரன் விவேக், நிதிஷ் ராஜகோபால், ஆர் கவின், சன்னி சந்து, பூபதி குமார், எஸ் ஹரிஷ் குமார், எம் முகமது, ஈஷ்வர் எம், எம் பொய்யாமொழி, ரஹில் ஷா, எஸ் அஜித் ராம், எம்இ யாழ் அருண் மொழி, தேவ் ராகுல்வி, தேவ் ராகுல், ஜே. சங்கர், பவித்ரன் ஆர், ஹிமாலயா.