ITT Vs SS 2nd Batting (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 13, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தன. நேற்று முன்தினம் (ஜூன் 11) நடைபெற்ற ஆட்டத்தில், கோவை அணியை வீழ்த்தி மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரின், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் இன்று (ஜூன் 13) முதல் தொடங்கி, ஜூன் 19ஆம் தேதி வரை வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது. ITT Vs SS: ருத்ரதாண்டவம் ஆடிய துஷார் ரஹேஜா.. சேலம் வெற்றி பெற 178 ரன்கள் இலக்கு..!

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேலம் ஸ்பார்டன்ஸ் (Idream Tiruppur Tamizhans Vs Salem Spartans):

இந்நிலையில், இன்று (ஜூன் 13) ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேலம் ஸ்பார்டன்ஸ் (ITT Vs SS, Match 9) அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற சேலம் அணியின் கேப்டன் அபிஷேக் செல்வகுமார் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அமித் சத்விக் - துஷார் ராஹேஜா இணை அதிரடியாக தொடக்கம் கொடுத்தது. 6.5 ஓவர்களில் 73 ரன்கள் சேர்த்த போது, அமித் சத்விக் 25 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த டேரில் 10 ரன்னிலும், முகமது அலி 2 ரன்னிலும் அவுட்டாகினர். மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த துஷார் ராஹேஜா 28 பந்துகளில் 74 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.

சேலம் அணி த்ரில் வெற்றி:

அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் 22 பந்துகள் விளையாடி 25 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். சசிதேவ் 18 ரன்னில் நடையை கட்ட, திருப்பூர் அணி பிரபஞ்சனை இம்பாக்ட் வீரராக களமிறக்கியது. ஆனால், அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, இறுதியில், திருப்பூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 177 ரன்கள் அடித்தது. இதனையடுத்து, சேலம் அணி 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது. aஆரம்பத்திலேயே ஹரி நிசாந்த் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர், கேப்டன் அபிஷேக் 10 ரன்னில் நடையை கட்டினார். நிதிஷ் ராஜகோபால் அதிரடியாக விளையாடி 69 ரன்களில் அவுட்டானார். பரபரப்பான இறுதி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், டி நடராஜன் பந்துவீசினார். 19.5 பந்தில் சேலம் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.