
ஜூன் 13, சேலம் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு (TNPL Live Watching) செய்யப்படுகிறது. மேலும், ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தன. நேற்று முன்தினம் (ஜூன் 11) நடைபெற்ற ஆட்டத்தில், கோவை அணியை வீழ்த்தி மதுரை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடரின், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் இன்று (ஜூன் 13) முதல் தொடங்கி, ஜூன் 19ஆம் தேதி வரை வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறுகிறது. ITT Vs SS: டிஎன்பிஎல் 9வது லீக் போட்டி.. திருப்பூர் - சேலம் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேலம் ஸ்பார்டன்ஸ் (Idream Tiruppur Tamizhans Vs Salem Spartans):
இந்நிலையில், இன்று (ஜூன் 13) ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேலம் ஸ்பார்டன்ஸ் (ITT Vs SS, Match 9) அணிகள் மோதுகின்றன. சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணி, அபிஷேக் செல்வகுமார் தலைமையிலான சேலம் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், திருப்பூர் அணி 3 போட்டியிலும், சேலம் அணி 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற சேலம் அணியின் கேப்டன் அபிஷேக் செல்வகுமார் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீரர்கள்:
சாய் கிஷோர் (கேப்டன்), அமித் சத்விக், துஷார் ராஹேஜா, டேரில் ஃபெராரியோ, பிரதோஷ் ரஞ்சன் பால், முகமது அலி, உதிரசாமி சசிதேவ், மதிவண்ணன் எம், ரகுபதி சிலம்பரசன், டி நடராஜன், இசக்கிமுத்து ஏ.
சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வீரர்கள்:
அபிஷேக் செல்வகுமார் (கேப்டன்), ஹரி நிஷாந்த், ஆர் கவின், பூபதி குமார், நிதிஷ் ராஜகோபால், சன்னி சந்து, எஸ் ஹரிஷ் குமார், முகமது எம், எம் பொய்யாமொழி, ரஹில் ஷா, யாழ் அருண் மொழி.