Uber Cup 2024 (Photo Credit: @chinaorgcn X)

மே 06, செங்டு (Sports News): ஆண்களுக்கான 33வது தாமஸ் கோப்பை (Thomas Cup) மற்றும் பெண்களுக்கான 30வது உபேர் கோப்பைக்கான (Uber Cup) பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து முடிந்துள்ளது.

தாமஸ் கோப்பை: இதில் ஆண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 10 முறை சாம்பியனான சீன அணி 31 என்ற கணக்கில் மலேசியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியா அணி 30 என்ற கணக்கில் சீன தைபேயை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த அணிகளுக்கான இறுதிப்போட்டியானது நேற்று நடந்தது. அதில் சீன அணியானது வெற்றி பெற்று 11 வது முறையாக தாமஸ் கோப்பையை வென்றுள்ளது. Bison Movie: மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் இணையும் படம்.. வெளியான மாஸ் டைட்டில்.. கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்..!

உபேர் கோப்பை: அதேபோல் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில், 15 முறை சாம்பியனான சீனா 30 என்ற கணக்கில் ஜப்பானையும், 3 முறை சாம்பியனான இந்தோனேசியா 32 என்ற கணக்கில் தென்கொரியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடித்து வைத்தன. அதிலும் சீன அணியானது வெற்றி பெற்று 16 வது முறையாக உபேர் கோப்பையை வென்றுள்ளது.