Pat Cummins (Photo Credit: @CricketNDTV X)

ஜூன் 12, லார்ட்ஸ் (Sports News): ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 (WTC Final 2025) இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் (SA Vs AUS, Day 2) மோதுகின்றன. இதில், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மூலம் நேரலையில் (WTC Final 2025 Live Streaming) பார்க்கலாம். இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். SA Vs AUS Day 2: தென்னாப்பிரிக்கா நிதான ஆட்டம்.. கேப்டன் பவுமா 36 ரன்னில் அவுட்..!

தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா (South Africa Vs Australia):

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு கவாஜா, கிரீன் அடுத்தடுத்து ரபாடா பந்துவீச்சில் அவுட்டாகினர். அடுத்து, மார்னஸ் லபுஷேன் 17 ரன்கள், ட்ராவிஸ் ஹெட் 11 ரன்னிலும் நடையை கட்டினர். அடுத்து ஜோடி சேர்ந்த ஸ்மித் - வெப்ஸ்டர் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மித் 66 ரன்கள், வெப்ஸ்டர் 72 ரன்கள் அடித்தனர். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

கம்மின்ஸ் அபாரம்:

இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்கரம் 0, ரியன் ரிகில்டன் 16, வியான் முல்டர் 6, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 22 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 43 ரன்கள் அடித்தது. இந்நிலையில், இன்று 2ஆம் நாளில் கேப்டன் பவுமா 3 ரன்னிலும், டேவிட் பேடிங்கம் 8 ரன்னிலும் ஆட்டத்தை தொடங்கினார். 169 ரன்கள் பின்தங்கிய நிலையில், தென்னாப்பிரிக்க அணி நிதானமாக விளையாடியது. அப்போது, கேப்டன் பவுமா 84 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பந்தில் அவுட்டானார். 2ஆம் நாள் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் 51.3 பந்தில் வெர்ரெயின் அவுட்டானார். அடுத்து வந்த மார்கோ யான்சன் கேப்டன் கம்மின்ஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். கம்மின்ஸ் ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

வீடியோ இதோ: