ஆகஸ்ட் 04, புலவாயோ (Sports News): நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (ZIM Vs NZ) தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும். முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் காயமடைந்த நியூசிலாந்து வீரர் நாதன் ஸ்மித் (Nathan Smith), ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ZIM Vs NZ 1st Test, Day 3: வெற்றியுடன் தொடங்கியது நியூசிலாந்து.. ஜிம்பாப்வே படுதோல்வி..!
நாதன் ஸ்மித் விலகல் (Nathan Smith Ruled Out):
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 07ஆம் தேதி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக காயம் காரணமாக வெளியேறிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் ஸ்மித்துக்கு பதிலாக, இளம் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சக்காரி ஃபால்க்ஸ் (Zakary Foulkes) சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணி வீரர்கள்:
கிரேக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், பென் கரண், தனகா சிவாங்கா, ட்ரெவர் குவாண்டு, சீன் வில்லியம்ஸ், ராய் கையா, சிக்கந்தர் ராசா (Sikandar Raza), தனுனுர்வா மகோனி, கிளைவ் மடாண்டே, வின்சென்ட் மசெகேசா, வெலிங்டன் மசகட்ஸா, பிளஸ்ஸிங் முசரபானி, நியூமன் நியாம்ஹுரி, தஃபட்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச்.
நியூசிலாந்து அணி வீரர்கள்:
டாம் லாதம் (கேப்டன்), வில் யங், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, டாம் பிளண்டெல், மேத்யூ ஃபிஷர், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், மைக்கேல் பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர் (Mitchell Santner), சக்காரி ஃபால்க்ஸ்.