
ஜூன் 30, புலவாயோ (Sports News): தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணி சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியது. இந்தத் தொடரில், முன்னணி வீரர்களான கேப்டன் பவுமா, மார்க்கரம், ரபாடா, யான்சன் ஆகியோர் இடம்பெறவில்லை. சுழற் பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்துகிறார். முதலாவது டெஸ்ட் போட்டி (ZIM Vs SA 1st Test) ஜூன் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ZIM Vs SA 1st Test, Day 3: வியான் முல்டர் அபார சதம்.. தென்னாப்பிரிக்கா 352 ரன்கள் முன்னிலை..!
ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா (Zimbabwe Vs South Africa):
அதன்படி, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 418 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 153, கார்பின் போஷ் 100*, டெவால்ட் ப்ரீவிஸ் 51 ரன்கள் அடித்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில், தனகா சிவாங்கா 4, முசரபானி 2, மசகட்சா மற்றும் மசெகேசா தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 137 ரன்கள் அடித்தார். தென்னாப்பிரிக்க அணி சார்பில் வியான் முல்டர் 4, கேசவ் மகாராஜ் மற்றும் யூசுப் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
தென்னாப்பிரிக்கா 503 ரன்கள் முன்னிலை:
இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணி 167 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஆரம்பத்தில் மேத்யூ ப்ரீட்ஸ்கே 1 ரன்னில் நடையை கட்டினார். டோனி டி சோர்ஜி 31 ரன்னிலும், டேவிட் பெடிங்ஹாம் 35 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்து வந்த லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 4, டெவால்ட் ப்ரீவிஸ் 3 ரன்னில் வின்சென்ட் மசெகேசா பந்தில் கிளீன் போல்ட் ஆகினர். வியான் முல்டர் சதமடித்து (147 ரன்கள்) அசத்தினார். கைல் வெர்ரேய்ன் 36 ரன்களுக்கு அவுட்டாகினார். 3ஆம் தேநீர் இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்களை இழந்து 336 ரன்கள் அடித்துள்ளது. இதன்மூலம், 503 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. கார்பின் போஷ் 32*, கேப்டன் கேசவ் மகாராஜ் 40* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
ஜிம்பாப்வே (பிளேயிங் லெவன்):
பிரையன் பென்னட், டகுட்ஸ்வானாஷே கைடானோ, நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரெய்க் எர்வின் (கேப்டன்), வெஸ்லி மாதேவெரே, தஃபட்ஸ்வா சிகா, வெலிங்டன் மசகட்சா, வின்சென்ட் மசெகேசா, ஆசிர்வாதம் முசரபானி, தனகா சிவாங்கா.
தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்):
டோனி டி சோர்ஜி, மேத்யூ ப்ரீட்ஸ்கே, வியான் முல்டர், டேவிட் பெடிங்ஹாம், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் ப்ரீவிஸ், கைல் வெர்ரேய்ன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ் (கேப்டன்), கோடி யூசுப், குவேனா மபாகா.