அக்டோபர் 18, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேவங்க கடலில் வரும் 22 ஆம் தேதியும் அரபி கடலில் அடுத்த 12 மணி நேரத்திலும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளது, அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு திசையை நோக்கி நகரும். மேற்கு - வட மேற்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி இந்திய பகுதியை விட்டு விலகி செல்லும்.
இன்றைய வானிலை (Today Weather): இதனால் அக்.18 ம் தேதியான இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. Auto Driver Arrested: நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது..!
நாளைய வானிலை (Tomorrow weather): நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் / புயலின் நகர்வு, காற்றின் வேகம், மழைக்கான சாதக சூழலை உங்களின் வீட்டில் இருந்தபடி Windy.com-ல் உடனுக்குடன் துல்லியமாக தெரிந்துகொள்ளுங்கள்.