செப்டம்பர் 12, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிலையம், காட்ராம்பாளையம் பகுதியில் விசாகா (Madurai Women's Hostel Fridge Blast) பெண்கள் தங்கும் விடுதியானது செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கல்லூரி, வேலையிடங்கள் என தனித்தனியே தங்களின் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
2 பேர் பலி, 3 பேர் காயம்:
இதனிடையே, இன்று காலை 04:30 மணியளவில் விடுதியில் இருந்த குளிர்சாதன (Refrigerator Blast) பெட்டி திடீரென வெடித்து சிதறியாக தெரிய வருகிறது. இந்த சம்பவத்தில் குளிர்சாதன பெட்டி அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்த சரண்யா மற்றும் பரிமளா சௌந்தரி ஆகியோர் இளம்பெண்கள் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும், 3 பெண்கள் காயம் அடைந்த நிலையில், மொத்தமாக இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். Immanuel Sekaran: மறைக்கப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் வரலாறு.. கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன.?
மீட்பு பணிகள் தீவிரம்:
இதில் பரிமளா மற்றும் சரண்யா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் கரும்புகை காரணமாக மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் 20-க்கும் மேற்பட்டோர், நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்களை பத்திரமாக மீட்டனர்.
மின்கசிவு காரணமா ?
இந்த சம்பவம் குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்புச் சூழல் நிலவி வருகிறது. காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக குளிர்சாதனப்பெட்டி வெடித்துசிதறி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .