Road Accident (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 10, திருமங்கலம் (Madurai News): மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காடனேரியை சேர்ந்த தம்பதி செந்தில் என்ற சென்றாயபெருமாள் (வயது 36)-பிரியங்கா (வயது 30). இவர்களுக்கு சிவானிகா (வயது 2) என்ற மகள் உள்ளார். செந்தில், உடல்நலக்குறைவு காரணமாக தனது மனைவியின் சொந்த ஊரான வேலூரில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இவர்கள் காரில் காடனேரி புறப்பட்டனர். அந்த காரில் செந்தில், பிரியங்கா, குழந்தை சிவானிகா மற்றும் பிரியங்காவின் சித்தப்பா சௌந்தரராஜன் (வயது 50), உறவினர்கள் சுரேஷ் (வயது 35), லல்லியம்மாள் (வயது 56), சாந்தா (வயது 56) ஆகிய 7 பேரும் பயணித்தனர். காரை திருப்பத்தூரை சேர்ந்த ஓட்டுநர் அபிஷ் (வயது 29) ஓட்டினார். TN Weather Update: காலை 10 மணிவரை 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

இவர்கள் வந்த கார் நேற்று காலை 6 மணியளவில் திருமங்கலம்-ராஜபாளையம் (Thirumangalam To Rajapalayam) சாலையில் புதுப்பட்டி பாலத்தை கடந்து சென்றபோது, முத்துலிங்காபுரத்திலிருந்து திருமங்கலம் நோக்கி வந்த அரசு நகர பேருந்துடன் நேருக்கு நேர் (Car-Bus Collision)மோதியது. இதில் அதிவேகமாக மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் குழந்தை சிவானிகா, சௌந்தரராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவிக்கு சிகிச்சைக்கு பிறகு, அவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.