Rain (Photo Credit: @thatsTamil X)

ஆகஸ்ட் 10, சென்னை (Chennai News): தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை-காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் 40 கிமீ வேகம் கொண்ட பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) செய்திக்குறிப்பில் தெரிவித்து இருந்தது. School Headmaster Arrest: மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட தலைமையாசிரியர் போக்சோவில் கைது..!

நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை:

அதேபோல, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை உறுதிசெய்யும் பொருட்டு நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் திடீர் கனமழை வெளுத்து வாங்கியது. புதுச்சேரி மாநிலத்திலும் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக, தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்தது.

காலை 10 மணிவரை 11 மாவட்டங்களில் மழை:

இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி-மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.