ஏப்ரல் 09, கன்னியாகுமரி (Kanyakumari News): கன்னியாகுமரி கடலில் அடிக்கடி பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வந்துகொண்டிருக்கிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமிக்கு (Tsunami) பிறகு, அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் கடலில் பல இயற்கை மாற்றங்கள் ஏற்படுகிறது. Calf Born With 6 Legs: ஆறு கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி – அதிசயமாக பார்த்து சென்ற கிராம மக்கள்..!
இந்நிலையில், நேற்றைய தினம் அமாவாசை அன்று கன்னியாகுமரியில் திடீரென கடல் சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கியுள்ளது. இதனால், கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்பு மற்றும் பாசி படிந்த பாறைகள் தெரிந்துள்ளன. கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கடலில் இறங்கி குளிக்க அச்சப்பட்டனர்.
இதனையடுத்து, கன்னியாகுமரி கடல் நடுவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்லும் படகு போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. மேலும் சின்னமுட்டம், வாவத்துறை, மணக்குடி, கோவளம், கீழமணக்குடி போன்ற கடல் பகுதிகளிலும் கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டுள்ளது.