Calf (Photo Credit: @Dailythanthi X)

ஏப்ரல் 09, பழனி (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே இருக்கின்ற தும்பலபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் விவசாயம் செய்து வருகிறார். மேற்கொண்டு ஆடு, மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், சக்திவேல் வளர்த்து வந்த பசுமாடு கன்று ஈனுவதற்கு பெரும் சிரமப்பட்டுள்ளது. சக்திவேல் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த கால்நடை மருத்துவ உதவியாளர், பசுமாட்டிற்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். Car-Bus Accident: கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது நேர்ந்த சோகம்..! – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி..!

இதனையடுத்து, பசுமாடு சிறிது நேரம் கழித்து கன்று குட்டியை ஈன்றுள்ளது. ஆனால், அந்த கன்றுக்குட்டி மற்றவைகள் போல் இல்லாமல், இதற்கு முன்கால் பகுதியின் மேலே இரண்டு கால்கள் என மொத்தம் ஆறு கால்களுடன் இருந்துள்ளது. 6 கால்களுடன் பிறந்த கன்றுக்குட்டியை, அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்த்து அதனை அவரவர் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து, பழனி கால்நடைதுறை உதவி இயக்குனர் சுரேஷ் அவர்கள் கூறுகையில், மரபணு குறைபாடு (Genetic deficiency) காரணமாக இதுபோன்று கன்றுக்குட்டிகள் பிறந்துள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.