Christian Pastor Arrested (Photo Credit: YouTube)

பிப்ரவரி 24, நாகர்கோவில் (Kanniyakumari News): கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே செம்பருத்திவிளையைச் சேர்ந்தவர் ஜான் ரோஸ் (வயது 63). இவர், பெருஞ்சிலம்பு கரும்பாலை பகுதியில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். இங்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெபம் நடத்த வருவது வழக்கம். அதன்படி, அப்பகுதியைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது 13 வயது மகள் அடிக்கடி இங்கு ஜெபம் நடத்த வந்துள்ளனர். சிறுமி, மதபோதகர் வீட்டில் சிறு, சிறு வேலைகளை செய்துவந்துள்ளார். "என்னங்க வெளிநாடு வேலை வேண்டாம்ங்க" - சொல்லியும் கேட்காத காதல் கணவன்.. மனைவியின் விபரீதத்தால் மரணம்.!

சிறுமி கர்ப்பம்:

இந்நிலையில், சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, சிறுமி பலாத்காரம் (Sexual Assault) செய்யப்பட்டு, தற்போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமியிடம் விசாரித்த போது, போதகர் ஜான் ரோஸ் செய்த பாலியல் சில்மிஷங்களை கூறியுள்ளார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அவரிடம் கேட்டபோது, அவர்களை மிரட்டிய ஜான் ரோஸ், கேரள மாநிலம், கொல்லத்துக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஜான் ரோஸ் தலைமறைவானார்.

மத போதகர் கைது:

இதனையடுத்து, கேரள காவல்துறையினர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன்பின்னர், கோயம்புத்தூரில் தலைமறைவாக இருந்த ஜான் ரோஸ், அவரது மனைவி ஜெலின் பிரபா, மகன் பிரதீப் ஆகியோரை காவல்துறையினர் போக்சோ வழக்கில் நேற்று (பிப்ரவரி 23) கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிறுமி சில நாட்களுக்கு முன்பு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3