
பிப்ரவரி 23, கோட்டக்குப்பம் (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம், சின்ன முதலியார் சாவடி, சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவர் மீனவர் ஆவார். இவரின் இளையமகள் முத்தரசி (வயது 23). கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன் (வயது 30). இருவருக்கும் செல்போனில் பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் காதல் வயப்பட்டுள்ளனர்.
காதல் திருமணம்:
இதனிடையே, இருவரும் வெவ்வேறு சமூகத்தவர்கள் என்பதால், லட்சுமணனின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே, வீட்டின் எதிர்ப்பை மீறி, கடந்த 4 மாதங்களுக்கு முன் முத்தரசியை தர்மபுரியில் இருக்கும் தனது குடும்ப குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்ற லட்சுமணன், மாலை மாற்றி-தாலி கட்டி திருமணம் செய்துஒண்டார். திருமணத்திற்கு பின்னர் புதுமண ஜோடி, சுனாமி குடியிருப்பில் முத்தரசியின் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். வானிலை: அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
வெளிநாடு வேலை:
வெளிநாடு வேலைகளுக்கு லட்சுமணன் ஏற்பாடு செய்திருந்த நிலையில், குவைத் நாட்டில் வேலைக்குச் செல்ல லட்சுமணனுக்கு அழைப்பு வந்தது. இதனை ஏற்று லட்சுமணன் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை எடுத்துக்கொண்டு, வேலை தரும் நிறுவனத்தின் மும்பை கிளை அலுவலகத்திற்கு நேரில் சென்றுள்ளார். கடந்த ஒரு வாரமாக லட்சுமணன் மும்பையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மனைவி கெஞ்சல்:
அப்போது, கணவருக்கு தொடர்புகொள்ளும் முத்தரசி, வெளிநாடு வேலை வேண்டாம், எதுவாக இருந்தாலும் இங்கேயே பார்த்துக்கொள்ளலாம். நான் உன்னுடன் இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார். அவரை கணவர் சமாதானம் செய்து வந்துள்ளார். குடும்பத்தினரும் மகளின் நிலையை புரிந்துகொண்டு, உங்களின் எதிர்காலம் தானே, சில ஆண்டுகளில் அவர் வந்துவிடுவார் என ஆறுதல் கூறி மனதை தேற்றி இருக்கின்றனர்.
விபரீத முடிவு:
இந்நிலையில், நேற்று காலை தனது தந்தை முருகனுக்கு உணவு கொடுத்துவிட்டு, பின் மாடிக்குச் சென்றவர் மீண்டும் கீழே வரவில்லை. மகளை தேடி பெற்றோர் சென்றபோது, அவர் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. பின் கோட்டக்குப்பம் காவல்துறையினருக்கு இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.
கண்ணீருடன் காதல் கணவர்:
தகவலின் பேரில் அதிகாரிகள் முத்தரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். மனைவியின் மரணத்தை அறிந்த லட்சுமணனும், மும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.