
மார்ச் 03, சென்னை (Chennai News): தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 03) முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவியர் உட்பட, 8 லட்சத்து 21,057 மாணவர்கள், இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு (12th Public Exams 2025) எழுதுகின்றனர். இன்று முதல் 25ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. இன்று தமிழ் மொழி பாடத்தேர்வு நடைபெறவுள்ளது.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. சொல்லச்சொல்லச் கேட்காத கள்ளக்காதல் பழக்கம்? தொழிலதிபரின் முகம் சிதைத்து கொடூர கொலை.. சென்னையில் ஷாக்.!
பாதுகாப்பு பணிகள்:
பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சுமார் 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணிநேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.