
மார்ச் 02, அம்பத்தூர் (Chennai News): சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதியில் வசித்து வந்த ஒருவர், சம்பவத்தன்று மர்ம கும்பலால் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கொலையானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் தினேஷ் பாபு (வயது 37) என்பது தெரியவந்தது. இவர் ரியல் எஸ்டேட், பில்டிங் கான்ட்ராக்டராக இருக்கிறார். தொழிலதிபராகவும் வலம்வந்துள்ளார். சம்பவத்தன்று அம்பத்தூரில் உள்ள தாசில்தார் அலுவலகம் பகுதியில், காலி மைதானத்தில் நண்பர்களுடன் பேட்மிட்டன் விளையாட தினேஷ் வருகை தந்தார். அவரை பயங்கர ஆயுதத்துடன் சுற்றிவளைத்த 5 பேர் கும்பல், தலை, மார்பு, கழுத்து பகுதியில் கடுமையான வெட்டுக்காயத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றது. வாய்வழி உறவால் கர்ப்பம்? மருத்துவர்கள் ஷாக்.. அதிர்ச்சி தகவல்.!
சதித்திட்டம் தீட்டி கொலை?
உயிருக்கு போராடிய தினேஷ் நண்பர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனையில் அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. தகவல் அறிந்த அதிகாரிகள் தொழில் போட்டியில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணையை முன்னெடுத்தனர். அதில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. பின் கொலையாளிகளை கைது செய்து விசாரித்தபோது, அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, தினேஷ் பாபு, கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். தம்பதிகளின் பிரிவுக்கு, தினேஷின் தனிப்பட்ட ரகசிய வாழ்க்கை காரணம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. தினேஷின் கள்ளக்காதலி குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதும் அம்பலமானது. 22 வயது ஆன்லைன் காதலருடன் ஓட்டம் பிடித்த 35 வயது மனைவி.. 5 மாதமாக தேடித்திரியும் கணவன்.. பரிதவிப்பில் குழந்தைகள்.!
முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு:
தினேஷ் பாபுவிடம், அவரின் கள்ளக்காதலி குடும்பத்தினர் பலமுறை முறையற்ற பழக்கத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், தினேஷ் பாபு அதனை கேட்கவில்லை. இதனால் கூலிப்படை ஏவி தினேஷ் பாபு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக 4 பேரிடம் அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர். முக்கிய குற்றவாளி தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை கைது செய்ய அதிகாரிகள் தீவிர விசாரணை முன்னெடுத்து இருக்கின்றனர். அவர் கைதாகிய பின்னரே முழு விசாரணை உண்மை தகவல் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.