
பிப்ரவரி 24, கரூர் (Karur News): கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். இவர், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, அங்குள்ள ஒரு மறைவான பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு நம்பி சென்ற மாணவியை, அந்த மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார். Minor Girl Pregnant: 13 வயது சிறுமியை சீரழித்த மத போதகர்; 'போக்சோ' வழக்கில் மூவர் கைது..!
மாணவி பாலியல் பலாத்காரம்:
இதனையடுத்து, மாணவியை கழுத்தை அறுத்து கொடூரமாக தாக்கியுள்ளார். இதில், பாதிக்கப்பட்ட மாணவி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில், 12ஆம் வகுப்பு மாணவனை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3