ஆகஸ்ட் 03, நாங்குநேரி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே இந்திய கடற்படை வளாகம் அமைந்துள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில், கேந்திர வித்யாலயா பள்ளியும் செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் மூலைக்கரை பட்டியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் எடுத்து வந்த தண்ணீர் சிந்தியதில், அது நாங்குநேரியைச் சேர்ந்த மாணவன் மீது பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இரு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். Coimbatore Shocker: வழக்கறிஞர் 4 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை; கோவையில் பயங்கரம்.!
இதனைத்தொடர்ந்து, நேற்றைய தினம் (ஆகஸ்ட் 02) பள்ளி வழக்கம்போல் செயல்பட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட மாணவன், தனது வீட்டில் இருந்து விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான கதிர் அரிவாளை எடுத்து வந்து மூலைகரைப்பட்டி மாணவன் மீது தாக்குதல் (Stabbing) நடத்தியுள்ளார். இதனைப் பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் தாக்குதலில் காயமடைந்த மாணவனை மீட்டு உடனே நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட மாணவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.