Boy Injury In Festival (Photo Credit: @SIVARAMAN74 X)

ஆகஸ்ட் 13, அரும்பாக்கம் (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டம், அரும்பாக்கம் அருகே காட்டுக்கொள்ளைமேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 11) இரவு தீமிதி திருவிழா (Fire Walk Festival) நடந்தது. அதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர். அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 47) என்பவர், அவரது மகன் மோனிஷ் (வயது 7) உடன் தீ மிதிக்க வந்தார். சிறுவன் மோனிஷ் தயக்கம் காட்டிய நிலையில், மகனின் கையை பிடித்துக்கொண்டு மணிகண்டன் தீக்குழியில் இறங்கினார். TN Weather Update: 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அப்போது, சிறுவன் மோனிஷ் தடுமாறி தீயில் விழுந்தார். உடனே சுற்றி இருந்தவர்கள் ஓடிச்சென்று சிறுவனை மீட்டனர். தீக்காயம் அடைந்த சிறுவன், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.