Murder File pic (Photo Credit: Pixabay)

மே 25, மேலூர் (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே கத்தப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில், தனியார் பவுண்டேஷன் சார்பில் அரபி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 13 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளனர். இந்நிலையில், இங்கு படிக்கும் ஷாநவாஸ் (வயது 9) என்ற சிறுவனுக்கும், 13 வயது மாணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவர் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியைக் (Stabbing) கொண்டு சிறுவன் ஷாநவாஸை சரமாரியாக குத்தியுள்ளார். Mother Suicide After Killing Two Children: கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு; 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை..!

இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். கொலை செய்த பயத்தில் அந்த 13 வயது மாணவன், சிறுவனின் உடலை யாரும் பார்த்து விட கூடாது என அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில், ஷாநவாஸ் உடலை போட்டுள்ளார். பின்னர், நீண்ட நேரமாகியும் சிறுவன் வராமல் இருப்பதால், பள்ளி நிர்வாகத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விடுதியில் தங்கிருந்த மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், 13 வயது மாணவன் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது, அந்த மாணவன் நடந்த அனைத்தையும் கூறி தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், தனது தாயை தவறாக பேசியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக, அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். பின்னர், கழிவுநீர் தொட்டியில் கிடைந்த ஷாநவாஸ் உடலை காவல்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கொண்டு சேர்த்தனர். இதனையடுத்து, சிறுவனை கொலை செய்த 13 வயது மாணவன் கைது செய்யப்பட்டார்.