Sea Wave (Photo Credit: Pixabay)

ஜூன் 12, சென்னை (Chennai News): தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் கள்ளக்கடல் எச்சரிக்கை (Black Sea Warning) இன்று மற்றும் நாளை (ஜூன் 12,13) இரவு 11.30 மணி வரை தொடர்வதாக இந்திய கடல்சார் தகவல் மையம் (Indian Maritime Information Centre) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் கடல் அலை அதிக உயரம் எழும்பும் வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Old Woman Murder: உடல் முழுவதும் பேனாவால் குத்தி மூதாட்டி படுகொலை; விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்..!

கன்னியாகுமரியில் 2.5 மீட்டர், ராமநாதபுரம் 2.8 மீட்டர், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் 2.6 மீட்டர் உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும் எனவும் இந்திய கடல்சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையும், ராமநாதபுரத்தில் ரோஜ்மா நகர் முதல் தீர்த்தாண்டதானம் வரையும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதலை முதல் வேம்பார் வரையும், நெல்லையில் குட்டப்புளி முதல் கூடுதலை வரையும் கடல் அதிக உயரம் எழும்ப வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் லேசான அலை எழுச்சி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பாலவாக்கம் முதல் லட்சுமிபுரம் ஓடைக்குப்பம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலம்பரைக்குப்பம் முதல் சின்ன நீலாங்கரை மற்றும் திருவள்ளூரில் பழவேற்காடு முதல் ராயபுரம் வரை லேசான அலை எழுச்சி நிகழ வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் நாளை மதியம் 1 மணி வரையிலும், திருவள்ளூரில் நாளை இரவு 7 மணி வரைக்கும் இந்த கடல் எழுச்சி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.