மே 08, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் அஸ்வந்த் (வயது 11). இவர், கோடைவிடுமுறையை கொண்டாட ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் தனது அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை விளையாடிக்கொண்டிருக்கையில், அப்பகுதியில் வீட்டில் வளர்த்து வரும் சைபீரியன் ஹஸ்கி வகை நாய் (Boy Bitten by Siberian Husky Dog) ஒன்று, விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கடித்தது. இதில் சிறுவன் அஸ்வந்த் கையில் காயம் ஏற்பட்டது. Young Girl Hanging Suicide: செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்து, படிக்க சொன்னதால் இளம்பெண் தற்கொலை..!
சிறுவனுக்கு சிகிச்சை - காவல் நிலையத்திலும் புகார்: உடனடியாக, சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காயம் அடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் பரங்கிமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து, நாய் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் நுங்கம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் சிறுமியை வளர்ப்பு நாய் ஒன்று கடித்த சம்பவம் நடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அதேபோல் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
In Alandur police quarters, Chennai, a nine-year-old was injured on the hand by a Siberian Husky pet dog. The police have filed a case against the dog's owner and initiated an investigation.@chennaicorp#DTNext #Dogs #Dogbite #PetDogs#Dogbiteissue #Chennai #ChennaiNews pic.twitter.com/uf7yl9FNWA
— DT Next (@dt_next) May 8, 2024