Boy Ends Life After Upset Over His Haircut: ஸ்டைலாக முடி வெட்டிய சிறுவன்... தந்தை கண்டித்ததால் தற்கொலை..!
சிவகங்கை மாவட்டம் அருகே ஸ்டைலாக முடி வெட்டியதை தந்தை கண்டித்ததால் சிறுவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 30, சிவகங்கை (Sivagangai): சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசித்து வரும் பழம் வியாபாரி இளையராஜா. ஆனந்தவல்லி தம்பதியரின் மகன் வேல் என்ற வேல்முருகன் (வயது 15). கல்குறிச்சி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அங்குள்ள சலூன் கடையில் பாக்ஸ் கட்டிங் ஸ்டைலில் முடிவெட்டியுள்ளார். முடிவெட்டி பின் வீட்டிற்கு வந்த அவரை தந்தை திட்டியுள்ளார். மகனை திட்டியதுடன் உடனே கடைக்கு அனுப்பி ஒட்ட முடி வெட்ட வைத்துள்ளார் தந்தை. Susan Polgar Speaks Out: செஸ் விளையாட்டின் போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பார்கள்... செஸ் வீராங்கனை சுசன் போல்காரின் பாப்பரப்பு குற்றச்சாட்டு..!
இதனால் சோகத்தில் இருந்த சிறுவன் மாடிக்கு சென்று தாயாரின் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. முடிவெட்ட சொன்னதற்காக சிறுவன் தற்கொலை செய்து கொண்டு இறந்தது இப்பகுதியில் மிகுந்த ஆழ்ந்த சோகத்தை எடுத்துவிட்டது
(The above story first appeared on LatestLY on Jan 30, 2024 07:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

