ஜனவரி 09, அமெரிக்கா (America): அமெரிக்காவில் வசித்து வரும் செஸ் (Chess) வீராங்கனை சுசன் போல்கார் (Susan Polgar), தமக்கு நேர்ந்த கசப்பான சம்பவம் குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், "நான் இளம் வீராங்கனையாக இருந்த போது ஒரு முறை கூட மேக்கப் போட்டதில்லை. அதற்கு இரண்டு முக்கிய காரணம் இருக்கிறது. நான் விளையாடிய காலத்தில் நான் மட்டும்தான் பெண் போட்டியாளராக இருப்பேன். மற்றவர்கள் எல்லாம் ஆண்களாக தான் இருப்பார்கள்.
அந்த சமயத்தில் என்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பார்கள். அங்கு இருக்கும் ஆண் போட்டியாளர்கள் என்னை அடித்து பாலியல் வற்புறுத்தலை தருவார்கள். என்னிடம் அப்போது போதிய பணமும் ஆடையும் இருக்காது. பாலியல் ரீதியான வேறுபாடுகள் இன்றளவும் செஸ் விளையாட்டில் இருக்கிறது. அப்போது நான் என்னுடைய திறமையை விளையாட்டில் நிரூபிக்க வேண்டும் என்று உழைத்தேன். 84-Year-Old Woman Raped: 84 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை.. சிறுவன் கைது..!
என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து எல்லாம் நான் சிந்திப்பதில்லை. ஏனென்றால் மற்ற ஆண்கள் என்னை வந்து சந்திக்க நான் அங்கு செல்லவில்லை. நான் ஒவ்வொரு தொடரிலும் விளையாடும்போது என்னுடைய பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். கடந்த காலத்தைப் பார்க்கும்போது இப்போது முன்னேறி இருக்கிறது. ஆனால் சில தருணங்களில் தப்பும் நடக்க தான் செய்கிறது.
இன்னும் சொல்லப்போனால் போட்டியின் போது சில ஆண்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. சில சமயம் மிகவும் ஆபத்தாக கூட போய் முடியும். என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக பல போட்டிகளில் நான் பங்கேற்காமல் பாதியிலே ஓடி வந்து விட்டேன். அதுவும் தொடரின் போது ஆண் போட்டியாளர்கள் மது அருந்தி விட்டால் அவர்களை கட்டுப்படுத்தவே முடியாது. பல போட்டியாளர்கள் என்னை படுக்கைக்கு அழைப்பார்கள். அப்போது முடியாது என்று சொன்னால், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். என்னை உடல் ரீதியாக தாக்கி இருக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
Why I chose to look ugly, and the reasoning behind it!
I read what @DivyaDeshmukh05 wrote about her recent horrible experience. It is absolutely terrible. Here is an article I wrote more than a decade ago about similar things I experienced:
When I was a young chess player, I… pic.twitter.com/jVP2W5hcb4
— Susan Polgar (@SusanPolgar) January 29, 2024