Deep Depression | Tirupati Rains (Photo Credit: @praddy06 / @GoTirupati X)

அக்டோபர் 16, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ள நிலையில், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது சென்னையில் இருந்து 320 கி.மீ தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை நேரத்தில் சென்னைக்கு அருகில் கரையை கடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆந்திர பகுதிகளில் கனமழை எச்சரிக்கை:

இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதி, சென்னைக்கு அருகில் வரவுள்ளது. தற்போதைய நிலைமையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 320 கிலோமீட்டர் தொலைவில், மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கரையை நோக்கி வரும் நிலையில், அது சென்னையை நோக்கி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திசை மாறி ஆந்திரா நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பயணம் செய்வதால், ஆந்திர பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர எல்லையில் இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தின் தமிழக பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Gold Silver Price: ரூ.57 ஆயிரத்தை கடந்தது சவரன் தங்கத்தின் விலை; நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.! 

தமிழ்நாட்டில் மழை குறைகிறது?

ஏற்கனவே நேற்று முதல் திருப்பதியில் மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், தற்போது அங்கு கனமழைக்கான வாய்ப்பானது அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் படிப்படியாக குறையலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில் மழையும் குறைந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் எல்லைப் பகுதிகள், வடசென்னை பகுதிகளில் ஆங்காங்கே மழை தொடருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மேகம் குறைந்த மையப்பகுதி சென்னைக்கு அருகே இருப்பதால், சென்னைக்கு மழை படிப்படியாக குறைந்து கொண்டே உள்ளது. தமிழ்நாட்டில் பெய்ய வேண்டிய மழை, ஆந்திரா நோக்கி நகருகிறது.

ஆந்திராவில் வெளுத்து வாங்கும் மழை:

சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கு திசையில் 320 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து ஆதிரா நோக்கி பயணம் செய்கிறது. இந்த மழையால் தமிழ்நாட்டில் அதிக மழைப்பொழிவு கிடைத்துள்ளது. இது இயல்பாய் விட 94% அதிகம் ஆகும். அக்.1 முதல் இன்று வரை மட்டுமே 94% அதிக மழையை தமிழ்நாடு பெற்றுள்ளது. கடந்த காலங்களில் 7 செமீ மழை மட்டுமே அதிகபட்சமாக பெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 13 செ.மீ அளவில் மழை பெறப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி திருப்பதி, நெல்லூர், கடப்பா ஆகிய பகுதிகளில் நேற்று முதல் கனமழையும் பெய்து வருகிறது.

திருப்பதி கோவிலில் மழை பெய்தபோது எடுக்கப்பட்ட காணொளி: