Murder File pic (Photo Credit: Pixabay)

ஜூன் 11, போச்சம்பள்ளி (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி பால்ராஜ்-ராமலிங்கம்மாள் (வயது 69). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பால்ராஜ் மற்றும் ஒரு மகன் விபத்தில் இறந்து விட்ட நிலையில், ராமலிங்கம்மாள் தனியாக வசித்து வந்தார். இவருக்கு இருகால்களும் செயலிழந்த நிலையில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவரது மூத்த மகன் சக்கரவர்த்திக்கு (வயது 45) திருமணமான நிலையில், மனைவி மற்றும் மகன்கள் பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் தாய் ராமலிங்கம்மாளுடன் சக்கரவர்த்தி வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில், ராமலிங்கம்மாள் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் (Stabbing Death) கிடந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். Peerkangai Benefits: நீர்ச்சத்துகள் நிறைந்த பீர்க்கங்காயில் உள்ள நன்மைகள் என்னென்ன..! விவரம் உள்ளே..!

இதுகுறித்து தகவலறிந்து வந்த மத்தூர் காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் அவரது மகன் சக்கரவர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் தாயை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதில் அவர் கூறுகையில், எனது தந்தை மற்றும் சகோதரன் விபத்தில் உயிரிழந்துவிட்டனர். அதற்காக இழப்பீடு பணம் வந்தது. அந்த பணத்தை எனக்கு பாகம் பிரித்து தருமாறு கேட்டேன். ஆனால், அதற்கு அவர் தர மறுத்தார். இதன்காரணமாக, எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, மதுபோதையில் வீட்டிற்கு வந்தேன். அப்போது, மீண்டும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரத்தில் அருகில் கிடந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சக்கரவர்த்தியை காவல்துறையினர் கைது செய்து, அவரை போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.