ஏப்ரல் 08, கோயம்புத்தூர் (Coimbatore): இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான (General Election) அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. TN Weather Report: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
மேலும் தமிழ்நாடு பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை (Tamil Nadu BJP president K Annamalai) கோவை லோக்சபா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் கோவை தொகுதியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan) மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர். அப்போது விவசாயி ஒருவர், அண்ணாமலைக்கு ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கினார். அதனை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட அண்ணாமலை, குட்டியை தாயோடு சேர்த்துவிடுமாறு விவசாயியிடமே திருப்பிக்கொடுத்தார்.