ஏப்ரல் 08, சென்னை (Chennai): இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 3 - 5° செல்சியஸ் அதிகமாக இருந்தது. தமிழக உள் மாவட்டங்களில் (கரூர் மற்றும் தருமபுரியில்) ஓரிரு இடங்களில் இயல்பை விட + 4.5° செல்சியஸ் மிக மிக அதிகமாக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கரூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் வெப்ப அலை நிலவியது. தமிழக உள் மாவட்டங்களில் ஒன்பது இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40° 41.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிக பட்ச வெப்பநிலை சேலத்தியில் 41.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (The Indian Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Prostitution Gang Arrested: ஸ்பா பெயரில் பலான தொழில்: அதிரடி ரைய்டு விட்டு, 4 பெண்களை மீட்ட காவல்துறையினர்.. தரமான சம்பவம்.!
மேலும் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 23° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.