ஏப்ரல் 02, சென்னை (Kitchen Tips): வாழைத்தண்டு நம் உடலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை அளிக்கிறது. வழக்கமாக இதனை சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. வாழைத்தண்டு மோர் கூட்டு என்பது சுவையான மற்றும் அதிக சத்து நிறைந்தது ஆகும். இதனை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - 1 வாழைத்தண்டு
புளித்த கெட்டியான தயிர் - முக்கால் கிண்ணம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு. A Terrible Earthquake: பயங்கரமான நிலநடுக்கம்; 6.1 என ரிக்டர் அளவுகோலில் பதிவு..!
தாளிக்க வேண்டியவை:
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை -சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
அரைத்து வைத்துக்கொள்ள வேண்டியவை:
அரிசிமாவு - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
ஊறவைத்த துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
செய்முறை:
முதலில் அரைத்துக்கொள்ள வேண்டிய பொருட்களை நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், வாழைத்தண்டை எடுத்து அதில் உள்ள நாரை நீக்கி, அதனை சுத்தம் செய்துவிட்டு பொடிப்பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்து அலசி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய வாழைத்தண்டு, மஞ்சள் தூள் போட்டு வேகவைக்க வேண்டும். நன்கு வெந்த பிறகு அதனுள் அரைத்த மசாலாவை சேர்த்து கொதிக்க வைத்து, தயிர் ஊற்றி இறக்கவும். தயிர் சேர்த்த பின்பு கொதிக்க வைக்க கூடாது. தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது, சுவையான வாழைத்தண்டு மோர் கூட்டு ரெடி.