Flood (Photo Credit: @chennaiweather X)

டிசம்பர் 18, சென்னை (Chennai): வெள்ளப்பெருக்கின்போது மின்சாதன இணைப்புகள் அனைத்தையும் துண்டித்துவிடவேண்டும். மக்களையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும். முடிந்த அளவுக்கு சொந்த உடைமைகளை மேல்தளத்திற்கோ அல்லது உயரத்தில் இருக்கும் அறைகளிலோ வைக்கவேண்டும். தண்ணீர் மாசுபடுதலைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதன் மணமோ, நிறமோ மற்றும் சுவையோ மாற்றப்பட்டிருப்பதை அறிய வேண்டும். மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளை உள்ளூர் நிறுவனங்களின் துணையுடன் அப்புறப்படுத்த வேண்டும். Flood Warning Issued Along Thamirabarani: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு... கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை..!

அதுமட்டுமின்றி கனமழை காலத்தில் மின்னல், இடி இடிக்கும் போது வெட்டவெளியில் உயரமான இடங்களில் பயணிப்பது, நடப்பதை தவிர்க்கலாம். அப்படி அந்த இடங்களில் இருந்தால் கைகளால் கால்களை இறுக்க அணைத்து தரையில் அமர்ந்து கொள்வது நல்லது. இதனால் மின்சாரம் நம் உடல் வழியாக செல்வதை தடுக்க முடியும். மேலும் மின்னல், இடி இடிக்கும் போது பொதுவெளியில் இருக்கும் மரங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கட்டாமல் தவிர்க்கலாம்.