ஆகஸ்ட் 02, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ள, ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம், கொள்ளிடம் ஆற்றில் (Kollidam River) ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்று (ஆகஸ்ட் 02) அதிகாலை ஆற்றில் சாய்ந்து விழுந்தது.
கர்நாடகாவில் காவிரி நீர் படிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர் நிரம்பி விட்டதால், அணைக்கு வரும் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் முழுவதுமாக காவிரியில் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இருகரைகளையும் தொட்டு ஆர்ப்பரித்து ஓடுகிறது. Sattur Accident: இருக்கன்குடி கோவிலுக்கு சென்ற பாதையாத்திரை பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்; லாரி மோதி 3 பேர் பலி.!
இதில் திருவானைக்கோவில், கொள்ளிடம் ஆற்றின் புதிய பாலத்தின் அருகே ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின்னழுத்த கோபுரத்தின் (High Voltage Tower) அஸ்திவார தூண்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால், நேற்று காலையில் இருந்தே மெதுவாக சாய்ந்து கொண்டே இருந்தது. மின்வாரிய ஊழியர்கள் அதை மீட்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை தழுவியது. இந்நிலையில், இன்று அதிகாலை உயர் மின்னழுத்த கோபுரம் ஆற்றில் விழுந்தது. இதனால் உயர் அழுத்த மின் கோபுரங்களில் கட்டப்பட்டிருந்த மின் கம்பிகள் பாலத்தின் மீது விழுந்தன. ஏற்கனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மின் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நேற்று (ஆகஸ்ட் 01) காலையிலேயே துண்டிக்கப்பட்டது. மேலும், பாலத்திலும் போக்குவரத்தை தடை செய்து காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.