ஜூன் 04, பூந்தமல்லி (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் 2-வது தெருவை சேர்ந்த தம்பதி சீனிவாசன் (வயது 35)-மங்கள லட்சுமி (வயது 30). இத்தம்பதிக்கு தஸ்வந்த் (வயது 8) என்ற மகன் உள்ளார். சீனிவாசன், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி, பூந்தமல்லி காவல்நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார். Minor Girl Pregnant: 13 வயது சிறுமி கர்ப்பம்; வீடியோ எடுத்து மிரட்டிய இருவர் கைது..!
இந்நிலையில், சீனிவாசன் தினம்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். வழக்கம்போல நேற்றைய தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர், தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மங்கள லட்சுமி, வீட்டில் இருந்த கத்தியை (Stabbing To Death) எடுத்து கணவரின் வயிற்றில் பலமாக குத்தியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து, தகவல் அறிந்து சென்ற நசரத்பேட்டை காவல்துறையினர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக, நசரத்பேட்டை காவல்துறையினர் கணவனை குத்திக்கொலை செய்த மங்கள லட்சுமி மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.